TNPSC Thervupettagam

ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் மறைவு

August 20 , 2018 2291 days 707 0
  • சுவிட்சர்லாந்தின் பெர்னில் ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் நோபல் அமைதிப் பரிசு பெற்றவரான கோபி அனான் காலமானார்.
  • இவர் ஐ.நா.வின் ஏழாவது பொதுச் செயலாளராக 1997 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இவர் ஐ.நா.வின் பொதுச் செயலாளராக இரு முறை பணியாற்றியுள்ளார்.
  • இவர் ஐ.நா.வின் பொதுச் செயலாளராக பணியாற்றியுள்ள முதலாவது ஆப்பிரிக்க கறுப்பினத்தைச் சேர்ந்தவர். மேலும் ஐ.நா.வின் அதிகாரிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது பொதுச் செயலாளர் இவராவார்.
[caption id="attachment_20701" align="aligncenter" width="640"] Former United Nations (UN) secretary-general Kofi Annan poses during a photo session in Paris on December 11, 2017. / AFP PHOTO / JOEL SAGET[/caption]
  • இவர் 1999ஆம் ஆண்டு ஐ.நா.வின் உலக உடன்படிக்கை முயற்சியைத் தொடங்கினார் (UN Global Compact Initiative). இவர் தொடங்கிய இந்த முயற்சியானது தற்பொழுது உலகில் பெருநிறுவனத்தின் சமூக பொறுப்புடைமையை (CSR - Corporate Social Responsibility) ஊக்குவிப்பதற்கான திட்டமாகும்.
  • மேலும் கோபி அனான் பவுண்டேசனை நிறுவி அதன் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். நெல்சன் மண்டேலா தொடங்கிய சர்வதேச நிறுவனமான ‘தி எல்டர்ஸ்’ (The Elders) என்ற அமைப்பின் தலைவராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.
  • 2001ஆம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசினை ஐ.நா.சபையுடன் இணைந்து கோபி அனானும் பெற்றுள்ளார்.
  • 2005ஆம் ஆண்டு ஐ.நா.வுக்குள்ளேயே இரு புதிய அரசுகளுக்கிடையேயான அமைப்புகளை உருவாக்குவதில் இவர் பெரும் பங்காற்றியுள்ளார். அமைதியை ஏற்படுத்தும் ஆணையம் மற்றும் மனித உரிமைகள் மன்றம் ஆகியவை அந்த இரு அரசுகளுக்கிடையேயான அமைப்புகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்