TNPSC Thervupettagam

ஐ.நா.வின் ‘லீஜியன் ஆப் மெரிட்’ (Legion of Merit) விருது

August 21 , 2018 2191 days 647 0
  • வாஷிங்டன் DCயின் பெண்டகனில் இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற தலைமை இராணுவ அதிகாரியான ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்கிற்கு 2018 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. வின் ‘லீஜியன் ஆப் மெரிட்’ (தளபதிக்கான பட்டம்) விருது வழங்கப்பட்டது.
  • இந்திய இராணுவத்திற்கு தனது பங்களிப்பை ஆற்றியதற்காக ஜெனரல் தல்பீர் சிங்கிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாட்டு இராணுவ தொடர்புகளில் பங்காற்றியதற்காகவும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவைச் சேர்ந்த இராணுவ வீரருக்கு இவ்விருது வழங்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்குமுன் இவ்விருது 1946ஆம் ஆண்டு ஜெனரல் இராஜேந்திரசிங் ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டது.
  • லீஜியன் ஆப் மெரிட் விருது 4 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
  1. தலைமை தளபதிக்கான பட்டம்
  2. தளபதிக்கான பட்டம்
  3. அதிகாரிக்கான பட்டம்
  4. படைக்கான பட்டம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்