உலக வங்கியானது முதல் பொதுவான சங்கிலித் தொடர் பத்திரமான ஐ-பத்திரத்தை (Bond-I) உருவாக்கியுள்ளது. இது சங்கிலித் தொடர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, மாற்றப்பட்டு மற்றும் நிர்வகிக்கப்படுகிறது.
Bond-I என்பது சங்கிலித் தொடரால் வழங்கப்படும் புதிய கடன் கருவியின் (Blockchain Offered New Debt Instrument) சுருக்கமாகும். மேலும் இது ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள சுற்றுலாப் புகழ்பெற்ற போண்டி கடற்கரையையும் குறிக்கிறது.
இந்த பத்திரத்திலிருந்து கிடைக்கும் நிதிகள் நிலையான அபிவிருத்தி முயற்சிகளுக்குச் (SDI – Susutainabale Development Initiative) செல்லும்.
ஐ-பத்திரமானது ஆஸ்திரேலியன் டாலர்களில் குறிக்கப்படும் ஈத்தேரியம் சங்கிலித் தொடர் பத்திரமாகும். ஆஸ்திரேலியாவின் உள்ளூர் பணத்தில் வழங்கப்பட்ட வெளிநாட்டு பத்திரங்களைக் குறிக்கும் கங்காரு பத்திரமாக இது குறிக்கப்படுகிறது.
உலக வங்கியானது ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் வங்கியை (ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி) இந்த பத்திரத்திற்கான ஒரே ஏற்பாட்டாளராக தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த பத்திரமானது இரண்டு ஆண்டு காலத்தை முதிர்ச்சி காலமாக உடையது மற்றும் இதன் வெளியீட்டிற்குப் பிறகு இது 100 மில்லியன் ஆஸ்திரேலியன் டாலரைப் (73.16 மில்லியன் அமெரிக்க டாலர்) பெற்றுள்ளது.