TNPSC Thervupettagam

ஒக்கி புயல்

December 5 , 2017 2576 days 2277 0
  • வலுவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் கேரள எல்லையை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தின் அருகில் உருவானதைத் தொடர்ந்து ‘ஒக்கி’ எனப் பெயர் சூட்டப்பட்ட புயலாக  தீவிரமடைந்தது.
  • இப்புயலுக்கு இடப்பட்டுள்ள ‘ஒக்கி’ எனப்படும் பெயரானது வங்கதேசத்தினால் வழங்கப்பட்ட பெயராகும். இதன் பொருள் ‘கண்’ ஆகும்.
சுறாவளி (Cyclone) பெயரிடல்
  • உலக வானிலை ஆய்வு மையம் மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக குழு ஆகிய இரண்டும் இணைந்து (United Nations Economic and Social Commission for Asia and the Pacific –UN-ESCAP)) 2000 ஆம் ஆண்டு வெப்பமண்டல புயல்களுக்கு பெயரிடல் முறையை தொடங்கின.
  • புயல்களைப் பற்றிய முன்னறிவிப்புகள், கண்காணிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பான தகவல்களை அளிப்பதற்கு முன்னறிவிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களிடையேயான தொலைத் தொடர்பை எளிமைப்படுத்துவதற்காக புயல்களுக்கு பெயரிடப்படுகின்றன.
  • உலகம் முழுவதும் உண்டாகும் புயல்களுக்கு 9 பிராந்தியப்பகுதிகளினால் பெயரிடப்படுகின்றது.
  • அவையாவன
    • வட அட்லான்டிக், வட பசிபிக்கின் கிழக்குப்பகுதி, மத்திய வட பசுபிக், தென்மேற்கு இந்தியப் பெருங்கடல், ஆஸ்திரேலிய கடற்பகுதி, தென் பசிபிக், தென் அட்லாண்டிக்.
  • வட இந்தியப் பெருங்கடல் படுகைகளில் (Indian Ocean Basin) ஏற்படும் புயல்களுக்கு இந்திய வானியல் துறையினால் ( IMD-Indian Meteorological Department) பெயரிடப்படுகின்றன.
  • ஒனில் என்று 2004-ல் பெயரிடப்பட்ட புயலே இந்தியாவால் பெயரிடப்பட்ட முதல் வெப்பமண்டலப் புயலாகும். ஒனில் எனும் வார்த்தை வங்கதேசத்திலிருந்து பெறப்பட்டது.
  • வட இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள நாடுகளான வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் தங்கள் சார்பில் ஒவ்வொன்றும் தலா 8 பெயர்களை வழங்கும். இப்படி பெறப்பட்ட 64 பெயர்கள் பட்டியலாகத் தொகுக்கப்படும்.
  • பின் வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பட்டியலிலிருந்து ஒவ்வொரு முறையும் ஒரு நாட்டின் பெயரென வரிசையாக இடப்படும்.
  • இதற்கு முன் இந்த ஆண்டு மே மாதத்தில் வடகிழக்கு இந்தியப் பகுதியில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்திய புயலுக்கு “மோரா” என பெயரிடப்பட்டது. இந்த வார்த்தை தாய்லாந்தில் இருந்து பெறப்பட்டது.
  • வட இந்தியப் பெருங்கடலில் உண்டாகும் அடுத்த புயலுக்கு பட்டியல் வரிசைப்படி இந்தியா வழங்கிய பெயரான ‘சாகர்’ எனும் பெயர் சூட்டப்படும்.
புயல் எச்சரிக்கை நிலைகள்
  • புயல் எச்சரிக்கையானது 4 நிலைகளாக மத்திய வானிலை ஆய்வு நிறுவனத்தால் மாநில அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்.
  • முதல் நிலை எச்சரிக்கையானது ‘புயலுக்கு முன்பான கண்காணிப்பு’ (Pre Cyclone Watch) ஆகும். இது புயல் இடையூற்றின் (Cyclonic Disturbance) உருவாக்கத்தைப் பற்றிய எச்சரிக்கையை அளிக்கும்.
  • இரண்டாம் நிலை எச்சரிக்கையானது ‘புயல் விழிப்பு’ (Cyclone Alert) ஆகும்.- இவை புயலின் தீவிரம் (Intensity) மற்றும் புயல் மையம் கொண்டுள்ள இடம் (Location) பற்றிய தகவல்களை அளிக்கும். மேலும் பாதகமான புயல் வானிலையால் பாதிக்கப்படக் கூடிய கடலோர மாவட்டங்கள் எவை என்றும் அப்பகுதி மீனவர்கள், பொதுமக்கள், ஊடகம் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாகிகளுக்கு அளிக்க வேண்டிய அறிவுறுத்தல்களையும் இந்த நிலை கொண்டிருக்கும்.
  • மூன்றாவது எச்சரிக்கை நிலையானது ‘புயல் எச்சரிக்கை’ (Cyclone warning) எனப்படும். இது புயலால் உண்டாகும் மழையின் அளவையும், இடத்தையும் மழை காலத்தையும் முன்னறிவிக்கும்.
  • நான்காவது எச்சரிக்கை நிலையானது ‘மழைப்பொழிவிற்கு பின்சார் கண்ணோட்டம்’ (Post Cyclonic Oulook) எனப்படும். இது மழைப் பொழிவு எதிர்பார்க்கப்படும் நேரத்தை முன்அறிவிப்பு செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்