ஒடிசாவின் கந்தமால் ஹால்தி (மஞ்சள்) ஆனது விரைவில் புவிசார் குறியீட்டைப் பெறவுள்ளது.
இதன் பதிவானது கந்தமால் வாசனைத் திரவியங்களுக்கான தலைமை சந்தைப்படுத்தும் கூட்டமைப்பால் செய்யப்பட்டு பொருட்களுக்கான புவிசார் குறியீட்டு (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999-ன் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கந்தமால் ஹால்தியானது அதன் குணமாக்கும் மருத்துவ பண்புகளால் பிரபலமானதாகும். இது கந்தமாலில் உள்ள பழங்குடி மக்களின் பிரதான பணப் பயிராகும்.