TNPSC Thervupettagam

ஒடிசாவின் கலியா திட்டம் PM - KISAN திட்டத்துடன் இணைப்பு

December 9 , 2019 1688 days 528 0
  • ஒடிசா அரசாங்கம் அதன் முதன்மைத் திட்டமான கலியாவை, நிதிக் கட்டுப்பாடு காரணமாக, மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM- KISAN) திட்டத்துடன் இணைக்க முடிவு செய்துள்ளது.  
  • இந்தப் புதிய திட்டத்தின் படி, கலியா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.10,000க்குப் பதிலாக, இப்போது மாநில அரசு ரூ.4,000 வழங்கும்.  மீதமுள்ள ரூ.6,000 PM - KISAN திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
  • கலியா திட்டத்தின் கீழ் மாநில அரசு ஆண்டுக்கு ரூ.12,000ஐ விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தொடர்ந்து செலுத்த இருக்கின்றது.

PM- KISAN திட்டம் பற்றி:

  • இது மத்திய வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசுத் திட்டமாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், 2 ஹெக்டேர் வரை சாகுபடி செய்யக் கூடிய சொந்த நிலம் கொண்ட விவசாயக் குடும்பங்களுக்கு  நேரடி வருமான உதவியாக ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்