ஒடிசா மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் தொகை மற்றும் கலாச்சாரத் தகவல்கள் அடங்கிய தொகுப்பான ‘ஒடிசாவின் பழங்குடியினரின் நிலப்பட ஏட்டை’ முதன்முறையாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
நாட்டில் பழங்குடியினருக்காக வெளியிடப்பட்ட முதல் தொகுப்பு இதுவாகும்.
இந்தப் புத்தகம் பழங்குடியினரின் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கான கல்விக் கழகத்துடன் (ATLC - Academy of Tribal language and Culture) இணைந்து எஸ்சி மற்றும் எஸ்டி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது..
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மத்தியப் பிரதேசத்திற்கு அடுத்து பழங்குயின மக்கள் தொகையில் ஒடிசா இரண்டாவது இடத்தில் உள்ளது.