TNPSC Thervupettagam

ஒடிசாவில் உள்ள ‘இயற்கை வளைவு’

June 21 , 2023 395 days 293 0
  • ஒடிசாவில் உள்ள ‘பிராமணி இயற்கை வளைவினை’ ஒரு புவிசார் பாரம்பரியத் தளமாக அறிவிப்பதற்கு இந்தியப் புவியியல் ஆய்வு மையம் முன்மொழிந்துள்ளது.
  • இது ஒடிசாவின் சுந்தர்கர் வனப் பிரிவின் கனிகா மலைத் தொடரில் அமைந்துள்ளது.
  • அவ்வாறு அறிவிக்கப்பட்டால், புவிசார் பாரம்பரியக் குறியீட்டினைப் பெற்ற நாட்டின் மிகப்பெரிய இயற்கை வளைவாக இது இருக்கும்.
  • இந்த இயற்கை வளைவு என்பது காம்தி நில அமைப்பின் மேல்நிலையில் உள்ள இரும்பு ஆக்சைடு சார்ந்த (ஃபெருஜினஸ்) மணற்கற்களால் ஆனது.
  • இது 184 முதல் 160 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடையூழி ஜுராசிக் காலம் முதல் இடையூழி ஜுராசிக் காலம் வரையிலானதாகும்.
  • இது மட்டுமல்லாமல் திருப்பதியில் உள்ள திருமலை மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய இடங்களில் இந்தியாவில் மேலும் இரண்டு இயற்கை வளைவுகள் உள்ள நிலையில் அவை இரண்டும் சுந்தர்கார் என்னுமிடத்தில் உள்ளதை விட சிறியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்