TNPSC Thervupettagam

ஒடிசாவில் ஒப்பந்தப் பண்ணையம்

May 25 , 2020 1556 days 598 0
  • ஒடிசா மாநில அரசானது ஒப்பந்தப் பண்ணையத்திற்காக முதலீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் ஒரு ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட அனுமதிக்கும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியுள்ளது.
  • இது வேளாண் பதப்படுத்துல்/ஏற்றுமதி அல்லது வர்த்தக அலகுகள் (மொத்த கொள்முதலாளர்கள்) விவசாயிகளிடமிருந்து குறிப்பிட்ட அளவுள்ள வேளாண் பொருட்களை முன்கூட்டியே ஒப்புக் கொள்ளப்பட்ட விலையில் வாங்குவதற்காக, அவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் ஒரு பண்ணைய முறையாகும்.
  • இந்தியாவில் ஒப்பந்தப் பண்ணையானது இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872ன் கீழ் ஒழுங்குமுறைப் படுத்தப்படுகின்றது.
  • மாதிரி வேளாண் உற்பத்திப் பொருள் சந்தைக் குழுச் சட்டம், 2003 (APMC - Agricultural Produce Market Committee) என்ற சட்டமானது ஒப்பந்தப் பண்ணையத்திற்காக சில விதிகளை வழங்குகின்றது.
  • வேளாண் துறை அமைச்சகமானது வரைவு மாதிரி ஒப்பந்தப் பண்ணையச் சட்டம், 2018 என்ற ஒரு மாதிரியை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்