TNPSC Thervupettagam

ஒடிசாவில் கரியால் முதலைகள் பாதுகாப்பு

July 26 , 2019 1823 days 1227 0
  • உயர் அச்சுறுத்தல் நிலையில் உள்ள “கரியால்” (gharials) முதலை இனங்களின் எண்ணிக்கையை, அதன் இயற்கை வாழிடங்களில் அதிகப்படுத்துவதற்கான தனது முயற்சியை ஒடிசா அரசு புதுப்பித்துள்ளது.

  • இது கதிர்வழி அலைசெலுத்துக் கருவி பொருத்தப்பட்ட 5 முதலைகளை மகாநதியின் சத்கோசி பள்ளத்தாக்கிற்குள் விடுவித்துள்ளது.
  • கடல் முதலைகள் மற்றும் மற்ற முதலைகளுடன் ஒப்பிடும்போது, கரியால் முதலை மிக நீண்ட மற்றும் குறுகிய முன்மூக்கைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் மூன்று வகை முதலை இனங்கள் காணப்படுகின்றன. அவையாவன
    • கரியால் (ஆற்று நீர் முதலை)
    • உவர்நீர் முதலை
    • சதுப்பு நில முதலை
  • இந்த மூன்று முதலை இனங்களையும் கொண்டுள்ள ஒரே இந்திய மாநிலம் ஒடிசா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்