TNPSC Thervupettagam

ஒடிசாவில் பைக்கா நினைவகம்

December 13 , 2019 1684 days 609 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் 1817 ஆம் ஆண்டில் நடைபெற்ற பைக்கா கிளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
  • பைக்கா நினைவகமானது பைக்கா கிளர்ச்சியின் 200 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும்.
  • இது ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் உள்ள பருனேய் மலையில் அமைய இருக்கின்றது.

பைக்கா கிளர்ச்சி பற்றி

  • குர்தாவின் கஜபதி மன்னரின் (பூரிக்கு அருகிலுள்ள ஒரு இராஜ்ஜியம்) போராளி இராணுவத்தின் பரம்பரைத் தலைவரான பாக்ஸி ஜகபந்து என்பவரின் தலைமையில் பைக்கா இன மக்கள் 1817 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  • இது 1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கு முந்தைய, காலனித்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு எழுச்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்