TNPSC Thervupettagam

ஒடிஸா தினம் – ஏப்ரல் 01

April 15 , 2018 2415 days 1105 0
  • உத்கல் திவாஸ் (Utkal Divas) எனப்படும் ஒடிஸா தினம் ஆண்டு தோறும் ஒடிஸா மாநிலம் முழுவதும் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று கொண்டாடப்படுகின்றது.
  • 1936 ஆம் ஆண்டு ஒடிஸா மாநிலமானது ஒருங்கிணைந்த பெங்கால்-பீகார் – ஒரிஸா மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக (combined Bengal-Bihar-Orissa province) உருவாக்கப்பட்டதை நினைவு கூர்வதற்காக இத்தினம் ஒடிஸா மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
  • 1568-ஆம் ஆண்டு ஒடிஸாவின் கடைசி இந்து அரசரான முகுந்த தேவினுடைய தோல்வி மற்றும் இறப்பிற்குப் பிறகு ஒடிஸா தனது முழு அரசியல் அடையாளத்தையும் இழந்தது. பின் இது பல்வேறு ஆண்டுகளாக வங்காள மாகாணத்திற்குட்பட்ட பகுதியாக இருந்து வந்தது.
  • பின் ஒடிஸா மாநிலமானது ஏப்ரல் 1, 1936 ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஓர் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • மதுசுதன் தாஸ், கோபபந்துதாஸ், மகாராஜா கீரூஷ சந்திர கஜபதி, பகிர் மோகன் சேனாபதி, கௌரி ஷங்கர் ரே போன்ற பல தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மொழி அடிப்படையில் ஒடிஸாவைத் தனி மாநிலமாக உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்