ஆஸ்திரேலியாவானது வானூர்தியில் இருந்து கொண்டு பயன்படுத்தப்படும் துப்பாக்கியைப் பயன்படுத்தி 10,000 ஒட்டகங்களைக் கொல்லத் தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையானது தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் உள்ள அனங்கு பிட்ஜந்த்ஜட்ஜாரா யான்குனிட்ஜட்ஜாராவில் (APY நிலம் என்றும் அழைக்கப்படும்) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
அவற்றின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படா விட்டால், ஒட்டகத்தின் எண்ணிக்கையானது ஒவ்வொரு 9 வருடங்களுக்கும் இரட்டிப்பாகும்.
விலங்குகளும் மிகப்பெரிய கார்பன் அடிச்சுவடைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ஒட்டகமும் வருடத்திற்கு ஒரு டன் கார்பன் டை ஆக்ஸைடிற்குச் சமமான மீத்தேன் வாயுவை வெளியிடுகின்றது.