TNPSC Thervupettagam

ஒட்டாத தன்மை கொண்ட டெஃப்ளான் ரக சமையல் பாத்திரங்களின் பயன்பாடு

May 24 , 2024 56 days 126 0
  • இந்தியர்களுக்கான திருத்தப்பட்ட உணவுமுறை வழிகாட்டுதல்களில் (DGIs), இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) மற்றும் தேசிய ஊட்டச்சத்து கல்வி நிறுவனம் (NIN) ஆகியவை டெல்ஃபான் வேதிப்பொருட்கள் பூச்சுகளில் உள்ள PFOA, PFOS ஆகியவற்றால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் காரணமாக ஒட்டாத தன்மை கொண்ட சமையல் பாத்திர பயன்பாட்டிற்கு எதிராக அறிவுறுத்தியுள்ளன.
  • பீங்கான், வார்ப்பிரும்பு மற்றும் துருப்பிடிக்காத எஃகு போன்றச் சுற்றுச்சூழலுக்கு உகந்த விருப்பத் தேர்வுகளை தேர்வு செய்து பயன்படுத்துமாறு ICMR அறிவுறுத்தி உள்ளது.
  • ஒட்டாத தன்மை கொண்ட சமையல் பாத்திரங்கள் ஆனது, அதன் ஒட்டாத மேற்பரப்பு காரணமாக சமையலுக்கு ஏதுவான விருப்பத் தீர்வாக நீண்ட காலமாக பயன்படுத்தப் படுகிறது.
  • இது சுத்தம் செய்வதை எளிதாக்குவதோடு, இதில் சமைப்பதற்கு மிகவும் குறைந்த எண்ணெயே தேவைப்படுகிறது.
  • ஒட்டாதத் தன்மை கொண்ட சமையல் பாத்திரங்கள் குறித்த முதன்மையான அச்சங்களில் ஒன்று பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (PFOA) மற்றும் பெர்ஃப்ளூரோக்டேன்சல்போனிக் அமிலம் (PFOS) ஆகும்.
  • அவை டெஃப்ளான் போன்ற ஒட்டாத தன்மை கொண்ட பூச்சுகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகும்.
  • ஒட்டாத தன்மை கொண்ட சமையல் பாத்திரங்கள் அதிக வெப்பநிலையில் சூடாக்கப் படும் போது, ​​இந்த இரசாயனங்கள் நச்சுப் புகைகளை காற்றில் வெளியிடலாம் என்ற நிலையில் இந்தப் புகையினை சுவாசிப்பது பல உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும்.
  • இந்தப் புகைகளை உள்ளிழுப்பது சுவாசப் பிரச்சனைகள், தைராய்டு கோளாறுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு சுகாதார உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.
  • PFOA ஆனது பெர்- மற்றும் பாலிஃப்ளூரோ அல்கைல் பொருட்கள் (PFAS) எனப்படும் இரசாயனங்களின் ஒரு பெரிய வகுப்பைச் சேர்ந்தது.
  • PFOA பயன்பாடானது பெருமளவில் குறைக்கப்பட்டாலும், மற்ற PFAS கலவைகள் இன்னும் சில ஒட்டாதத் தன்மை கொண்ட சமையல் பாத்திரங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.
  • ஒட்டாதத் தன்மை கொண்ட சமையல் பாத்திரங்கள், குறிப்பாக பாலிடெட்ரா புளோரோஎத்திலீன் (PTFE அல்லது டெஃப்ளான்) பூச்சு பூசப்பட்டவை, அதிக அளவில் வெப்பமடையும் போது நச்சுப் புகைகளை வெளியிடலாம்.
  • அவை மனிதர்களுக்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடியவை மற்றும் பறவைகளுக்கு ஆபத்தானவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்