தமிழகத்தின் ஒட்டு மொத்த நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழான தடுப்பூசி வழங்கீட்டுப் பரவல் 95 சதவீதத்தினை தாண்டியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் 9.15 லட்சம் குழந்தைகளுக்கும், 10 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் பொது நோய்த் தடுப்புத் திட்டத்தின் (UIP) கீழ் நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது.
மாநிலத்தில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 3.2 கோடி தடுப்பூசிகள் வழங்கப் பட்டுள்ளன.
1985 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பொது நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடிய 12 நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் ஆனது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.