ஒமிக்ரான் மாற்றுருவினை எதிர்கொள்ளும் கோவிட்-19 தடுப்பூசியை அங்கீகரிக்கும் முதல் நாடாக பிரிட்டன் மாறியுள்ளது.
வயது வந்தோருக்கான ஊக்கியாக மாடர்னா நிறுவனம் தயாரித்த 'ஈரிணைத் திறன் கொண்ட' தடுப்பூசியை இங்கிலாந்து மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் அங்கீகரித்து உள்ளது.
இந்த தடுப்பூசி ஆனது ஓமைக்ரான் (BA.1) மற்றும் 2020 ஆம் ஆண்டில் பரவிய வைரஸ் ஆகிய இரண்டிற்கும் எதிராக "ஒரு வலுவான நோயெதிர்ப்புத் திறனை" தூண்டுகிறது.
இது தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் ஓமைக்ரான் மாற்றுருவின் பிற துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றிற்கு எதிராக ஒரு நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது.