ஒருங்கிணைக்கப்படாத துறைசார் நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு
December 28 , 2024 62 days 86 0
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது, ஒருங்கிணைக்கப் படாத துறை சார் நிறுவனங்களின் (ASUSE) கணக்கெடுப்பினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளது.
கடைசியாக 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆகிய காலக்கட்டத்திற்கு இடையில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
அடுத்தக் கணக்கெடுப்பு ஆனது, மாவட்ட வாரியான சில தரவுகளைச் சேகரிப்பதற்கு முயற்சிக்கும், மேலும் ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்கள் மாவட்டங்களில் உள்ள உள்ளூர் பொருளாதாரங்களை எவ்வாறு தூண்டுவிக்கின்றன என்பதைப் பற்றிய சில விவரங்களை வழங்க உதவும்.
கூடுதலாக, தேசிய மற்றும் மாநில அளவில் தற்போது கிடைக்கப் பெறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளி விவரங்கள் ஆனது மாவட்ட அளவிலும் கிடைக்கப் பெறும் வகையில் வழி வகை செய்யப்படும்.
1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டம் அல்லது 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத வேளாண்மை சாராத நிறுவனங்களே ஒருங்கிணைக்கப் படாத நிறுவனங்கள் ஆகும்.
முந்தையக் கணக்கெடுப்பில் 498,024 நிறுவனங்களின் தரவுகள் பதிவு செய்யப்பட்டது, அதில் 273,085 நிறுவனங்கள் கிராமப்புறங்களிலிலும், 224,939 நிறுவனங்கள் நகர்ப் புறங்களிலிலும் இருந்தன.
இந்த வாரம் வெளியிடப்பட்ட இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள், முந்தைய ஆண்டில் 65.1 மில்லியனாக இருந்த ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களின் எண்ணிக்கை ஆனது 12.8% அதிகரித்து 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 73.4 மில்லியனாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
சேவைத் துறை மட்டுமே சுமார் 30.4 மில்லியன் நிறுவனங்களில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
அதைத் தொடர்ந்து வர்த்தகத் துறை 22.8 மில்லியன் பங்கினையும், உற்பத்தித் துறை 20.1 மில்லியன் பங்கினையும் கொண்டுள்ளன.