2025 ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட கழுகுக் கணக்கெடுப்பு ஆனது தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக வனத்துறைகளால் மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கணக்கெடுப்பானது தமிழ்நாட்டில் முதுமலை புலிகள் வளங்காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் வளங்காப்பகம் மற்றும் நெல்லை வனவிலங்கு சரணாலயம்; கேரளாவில் வயநாடு வனவிலங்கு சரணாலயம்; மற்றும் கர்நாடகாவில் பந்திப்பூர் புலிகள் வளங்காப்பகம், பிலிகிரி இரங்கசாமி கோயில் புலிகள் வளங்காப்பகம் மற்றும் நகர்ஹோலே புலிகள் வளங்காப்பகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் மொத்தம் 157 கழுகுகள் பதிவு செய்யப்பட்டன என்ற நிலையில் இது இந்த மாநிலத்தில் கழுகு எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காட்டுகிறது.
110 எண்ணிக்கையுடன் வெண்முதுகுக் கழுகுகள் ஆனது மிகவும் மிகுதியாக உள்ள ஒரு இனமாகும்.
இதைத் தொடர்ந்து நீண்ட அலகு கொண்ட கழுகு (31), செந்தலைக் கழுகு (11) மற்றும் எகிப்தியக் கழுகு (5) ஆகியவை உள்ளன.
முதுமலை புலிகள் வளங்காப்பகம் ஆனது, பெரும் பயன்பாட்டில் உள்ள 60 கூடுகளைக் கொண்ட கழுகுகளின் மிகவும் குறிப்பிடத்தக்க இனப்பெருக்க எண்ணிக்கையினைக் கொண்டுள்ளதோடு இங்கு 120 கழுகுகள் காணப்படுகின்றன.
இந்த எண்ணிக்கையில் முக்கியமாக வெண்முதுகுக் கழுகுகள் (108) உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து நீண்ட அலகு கொண்ட கழுகுகள் (10), மற்றும் செந்தலைக் கழுகுகள் (2) உள்ளடங்கியுள்ளன.
முக்கியமாக, 34 குஞ்சுகளும் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதோடு இது ஒரு வளமான இனப்பெருக்கப் பகுதியினையும் குறிக்கிறது.