ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான (UPS) அரசிதழ் அறிவிப்பினை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஆனது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இது பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இது அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு அவர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உத்தரவாதமான ஓய்வூதியங்களை வழங்கும்.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் உள்ள மற்றும் UPS தெரிவினைத் தேர்ந்து எடுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே UPS பொருந்தும்.
UPS திட்டத்தின் கீழ், 25 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் அரசுப் பணியாற்றிய ஊழியர்கள், கடந்த 12 மாதங்களில் அவர்கள் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% உத்தரவாதமான ஓய்வூதியத்தைப் பெறுவர்.
25 ஆண்டுகளுக்கும் குறைவான ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்கள் விகிதாசார அடிப்படையிலான ஓய்வூதியத்தைப் பெறுவர்.
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் என்ற தகுதிக் காலத்திற்குப் பணியாற்றிய ஊழியர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய் என்ற உத்தரவாதமான ஓய்வூதியத்தைப் பெறுவர்.