மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் அமைப்பினை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இது ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் (IDSP - Integrated Disease Surveillance Programme) மேம்பட்ட பதிப்பு ஆகும்.
இத்துடன் மேம்பட்ட டிஜிட்டல் ரீதியிலான நோய் கண்காணிப்பு அமைப்பினை மேற்கொண்டுள்ள உலகின் முதல் நாடாக இந்தியா உருவெருத்துள்ளது.
மேலும் (புவிசார் பரவல், கணக்கில் சேர்க்கப்பட்ட நோய்களின் எண்ணிக்கை மற்றும் உருவாக்கப்பட்ட தரவுகளின் அளவுகள் ஆகியவற்றின் அடிப்படையில்) இது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் நோய் கண்காணிப்பு தளமாகும்.
தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இத்தளத்தை உருவாக்குவதில் இணைந்துள்ளன.
இத்தளம் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்துடன் ஒத்திசைந்து ‘ஆத்ம நிர்பர் சுவதேஷ் பாரத்’ எனும் இலக்கை அடைய உதவும்
இத்தளம் 33 நோய்களைக் கண்காணித்து டிஜிட்டல் முறையில் நிகழ்நேர தரவுகளை வழங்கும் திறனுடையதாகும்.