TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த போர்க்கள கட்டுப்பாட்டுப் பிரிவுகள்

May 29 , 2024 51 days 148 0
  • இந்திய ஆயுதப் படைகள் ஆனது ஒருங்கிணைந்த போர்க்களக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளை உருவாக்குவதற்கான இறுதி வரைவைச் செய்து வருகின்றன.
  • சிறிய மோதல் அல்லது போரின் போது வரையறுக்கப்பட்ட இராணுவ இலக்குகளுடன் குறிப்பிட்ட ஒரு எதிரி அடிப்படையிலான பல போர்க்களங்களில் ஒன்றிணைந்து நன்கு செயல்படுவதற்காக மூன்று பாதுகாப்புப் படைகளை மிக நன்கு ஒருங்கிணைப்பதை இந்தச் சீர்திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மூன்று பாதுகாப்புப் படைகளும் தற்போது தனித்தனியாக அவற்றின் தனிப்பட்ட செயல்பாட்டுக் கட்டுபாட்டுப் பிரிவுகளின் கீழ் இயங்குகின்றன.
  • போர்க்களக் கட்டுப்பாட்டு அமைப்புகளை உருவாக்குவதன் மூலம், அவற்றின் பணியாளர்கள், சொத்துக்கள், உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் ஆகியன ஒருங்கிணைக்கப் படும்.
  • தற்போது, இ​​ராணுவம் மற்றும் இந்திய விமானப் படைக்கு தலா ஏழு கட்டுப்பாட்டுப் பிரிவுகளும், கடற்படைக்கு மூன்று கட்டுப்பாட்டுப் பிரிவுகளும் உள்ளன.
  • கூடுதலாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் உத்திசார் படைகள் பிரிவு (SFC) ஆகிய இரண்டு முப்படை கட்டுப்பாட்டுப் பிரிவுகளும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்