இந்திய ஆயுதப் படைகள் ஆனது ஒருங்கிணைந்த போர்க்களக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளை உருவாக்குவதற்கான இறுதி வரைவைச் செய்து வருகின்றன.
சிறிய மோதல் அல்லது போரின் போது வரையறுக்கப்பட்ட இராணுவ இலக்குகளுடன் குறிப்பிட்ட ஒரு எதிரி அடிப்படையிலான பல போர்க்களங்களில் ஒன்றிணைந்து நன்கு செயல்படுவதற்காக மூன்று பாதுகாப்புப் படைகளை மிக நன்கு ஒருங்கிணைப்பதை இந்தச் சீர்திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மூன்று பாதுகாப்புப் படைகளும் தற்போது தனித்தனியாக அவற்றின் தனிப்பட்ட செயல்பாட்டுக் கட்டுபாட்டுப் பிரிவுகளின் கீழ் இயங்குகின்றன.
போர்க்களக் கட்டுப்பாட்டு அமைப்புகளை உருவாக்குவதன் மூலம், அவற்றின் பணியாளர்கள், சொத்துக்கள், உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் ஆகியன ஒருங்கிணைக்கப் படும்.
தற்போது, இராணுவம் மற்றும் இந்திய விமானப் படைக்கு தலா ஏழு கட்டுப்பாட்டுப் பிரிவுகளும், கடற்படைக்கு மூன்று கட்டுப்பாட்டுப் பிரிவுகளும் உள்ளன.
கூடுதலாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் உத்திசார் படைகள் பிரிவு (SFC) ஆகிய இரண்டு முப்படை கட்டுப்பாட்டுப் பிரிவுகளும் உள்ளன.