ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடக்கிய பொது மக்கள் குறை தீர்ப்பு முதலமைச்சர் உதவி மையம்
February 2 , 2021 1451 days 765 0
பொது மக்களின் குறைகளை விரைவாக மற்றும் திறனுள்ள வகையில் தீர்த்து வைப்பதற்காக, மாநில அரசானது ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடக்கிய பொது மக்கள் குறை தீர்ப்பு முதலமைச்சர் உதவி மையத்தை அமைப்பது குறித்த ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இந்த அமைப்பானது அனைத்துத் துறைகளின் உதவி மையங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்பு நடைமுறைகளை ஒருங்கிணைந்து அவற்றை ஒரே தளத்தில் கொண்டு வர உதவ இருக்கின்றது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ”1100” என்ற அழைப்பு எண்ணுடன் இணைந்த ஒரு உதவி மையம் அமைக்கப்பட உள்ளது.