TNPSC Thervupettagam

ஒரு நாடு ஒரு உதவி எண்

June 26 , 2023 393 days 230 0
  • மத்திய அரசானது, ERSS-112 (அவசர நடவடிக்கை உதவி வழங்கீட்டு அமைப்பு) உடன் மகளிர் உதவி எண், குழந்தைகளுக்கான உதவி எண் ஆகியவற்றினை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது.
  • 2015 ஆம் ஆண்டு சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் 2(25)வது பிரிவின் கீழ் குழந்தைகளுக்கான உதவி எண் சேவைகள் வரையறுக்கப் பட்டு உள்ளன.
  • இது நெருக்கடி நிலையில் உள்ள குழந்தைகளை அவசர கால அல்லது நீண்ட காலப் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவையுடன் இணைக்கின்ற 24 மணி நேர அவசர காலச் சேவையாகும்.
  • நெருக்கடியில் உள்ள எந்தவொரு குழந்தையும் அல்லது அவர்கள் சார்பாக எந்தவொரு வயது வந்த நபரும் நான்கு இலக்க இலவச எண்ணை (1098) அழைப்பதன் மூலம் இந்தச் சேவையை அணுகலாம்.
  • கேரளாவில் உள்ள மேம்படுத்தப்பட்ட கணினி முறைக்கான மையம் (C-DAC) ஆனது, 1098 என்ற குழந்தைகளுக்கான ஒரு உதவி எண்ணின் தன்னியக்கம் மற்றும் ERSS-112 உடன் அதனை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றிற்கான ஒரு மொத்தத் தொழில்நுட்பத் தீர்வு வழங்குனராக (TSP) உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்