TNPSC Thervupettagam

ஒரு நிமிடப் போக்குவரத்து விளக்குத் திட்டம்

May 10 , 2023 437 days 261 0
  • சிம்லா காவல்துறை ‘ஒரு நிமிடப் போக்குவரத்து விளக்கு’ எனும்  திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
  • தனது மாநிலத் தலைநகரை நெரிசல் இல்லாததாக மாற்றவும், பயண நேரத்தைப் பாதிக்கு மேல் குறைக்கவும், முக்கிய இடங்களில் 10 போக்குவரத்து விளக்குகளை அமைக்கவும் இத்திட்டம் முன்மொழிகிறது.
  • முன்மொழியப்பட்ட இந்த அமைப்பின்  கீழ் ஒவ்வொரு நிமிடமும் 40:20 மற்றும் 30:30 வினாடிகள் என்ற விகிதத்தில் போக்குவரத்து சமிக்ஞை வெளியிடப்படும்.
  • இதன் பொருள், உச்சக்கட்ட  நெரிசல் நேரங்களின்  போது வாகனங்கள் 40 வினாடிகள் நிறுத்தப் பட்டு பிறகு அடுத்த  20 வினாடிகளுக்கு விடுவிக்கப் படும்.
  • சாதாரண நேரங்களில் அவை 30 வினாடிகள் நிறுத்தப்பட்டுப் பிறகு 30 வினாடிகள் விடுவிக்கப் படும்.
  • புதிய போக்குவரத்து முறையின் கீழ் வாகனங்கள் நிறுத்தப்படும் குறைந்தபட்ச தூரம் 500 மீட்டராக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்