TNPSC Thervupettagam

ஒரு மாநிலம், ஒரு RRB

April 10 , 2025 10 days 86 0
  • 2025 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் பல பிராந்தியக் கிராமப்புற வங்கிகள் (RRBs) ஒன்றிணைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
  • இந்த RRB வங்கிகள் ஆனது அவற்றின் பல சொத்துக்கள், அதிகாரங்கள், உரிமைகள், பொறுப்புகள் மற்றும் கடமைகளைப் பெற்று ஒரே நிறுவனமாக ஒன்றிணைக்கப்படும்.
  • மிகப்பெரியப் பொதுத்துறை கடன் வழங்குநரான பாரத் ஸ்டேட் வங்கியானது  (SBI), அதிக எண்ணிக்கையிலான RRB வங்கிகளுக்கு (14) நிதியுதவி வழங்குகிறது, அதைத் தொடர்ந்து பஞ்சாப் தேசிய வங்கி (9) மற்றும் கனரா வங்கி (4) ஆகியவற்றிற்கு நிதி அளிக்கிறது.
  • மாநிலங்களில், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தலா மூன்று RRB வங்கிகள் உள்ளன.
  • RRB வங்கிகள் ஆனது 2024 ஆம் நிதியாண்டில் 7,571 கோடி ரூபாய் என்ற மிக அதிகபட்ச ஒருங்கிணைந்த நிகர இலாபத்தைப் பதிவு செய்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்