ஒரு வினாடிக்கும் குறைவான பிரகாசமான ஊடுகதிர் வெடிப்பு நிகழ்வுகள்
January 1 , 2024 329 days 327 0
ஆஸ்ட்ரோசாட் ஆய்வகமானது, அதி உயர் காந்தப்புலத்துடன் (காந்த விண்மீன்) கூடிய புதிய மற்றும் தனித்துவமான நியூட்ரான் நட்சத்திரத்திலிருந்து பிரகாசமான ஒரு வினாடிக்கும் குறைவான பிரகாசமான ஊடுகதிர் வெடிப்பு நிகழ்வுகளை கண்டறிந்து உள்ளது.
இது காந்த விண்மீன்களின் அசாதாரணமான தீவிர வானியற்பியல் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
33 மில்லி விநாடிகள் என்ற சராசரி கால அளவுடன் கூடிய 67 குறுகிய ஊடுகதிர் வெடிப்பு நிகழ்வுகள் கண்டறியப்பட்டது முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.
இந்த வெடிப்புகளில் பிரகாசமான ஒன்று சுமார் 90 மில்லி விநாடிகள் நீடித்தது.
ஆஸ்ட்ரோசாட் விண்வெளியில் அமைந்த இந்தியாவின் முதலாவது பல அலைநீள ஆய்வகமாகும்.
காந்த விண்மீன்கள் என்பது நிலப்பரப்பு சார்ந்த காந்தப் புலத்தை விட மிகவும் வலிமையான அதி உயர் காந்தப்புலம் கொண்ட நியூட்ரான் நட்சத்திரங்கள் ஆகும்.