TNPSC Thervupettagam

ஒரே சமயத்திலான தேர்தல்கள்

May 1 , 2018 2403 days 660 0
  • சட்ட ஆணையத்தால் வெளியிடப்பட்ட வரைவு வெள்ளை அறிக்கையானது மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் 2019 ஆம் ஆண்டில், ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்திட பரிந்துரை செய்துள்ளது.
  • இந்த நோக்கம் நிறைவேறிட அரசியலமைப்பை திருத்திடவும் இது பரிந்துரை செய்கின்றது.
  • இந்த ஆணையம் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி S. சௌஹான் தலைமையில் அமைந்திருக்கின்றது.

 முக்கியப் பரிந்துரைகள்:

  • ஒரே சமயத்திலான தேர்தல்கள், சுதந்திரத்திற்கு பிறகிலிருந்து 1967 வரையிலான முதல் இருபது ஆண்டுகளில் நடத்தப்பட்டன என ஆணையம் கூறுகின்றது.
  • வெள்ளை அறிக்கையானது, அரசியலமைப்பு, 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் மக்களவை, மாநில சட்டமன்றங்கள் ஆகியவற்றின் நடைமுறை விதிகள் ஆகியவற்றை திருத்துவதன் மூலம் ஒரே சமயத்திலான தேர்தல்களை நடத்த முடியும் என பரிந்துரை செய்கின்றது.
  • இந்தக் குழுவானது, இடைக்கால தேர்தல்கள் நடத்தப்படுமேயானால் புதிய மக்களவை அல்லது சட்டப் பேரவைகள் ஏற்கனவே உள்ள மக்களவை அல்லது சட்டப் பேரவைகளின் எஞ்சியுள்ள காலத்திற்கு மட்டும் ஏற்படுத்தப்படுமென்றும், புதிய ஐந்து வருடங்களுக்கு ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் கூறுகின்றது.
  • மேலும் இவ்வறிக்கை பிரதமர் அல்லது முதல்வர், சபாநாயகர் போன்று சபையின் முழுக் காலத்திற்கும் தலைமை வகிக்கும் முறையில் ஒட்டு மொத்த அவையால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும் கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்