பஞ்சாப், பீகார், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் டாமன் & டையூ ஆகியவை “ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை” என்ற திட்டத்துடன் இணைந்துள்ளன.
இதற்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் நோக்கம் மாநிலங்களுக்கிடையே குடும்ப அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பதாகும்.
இது அனைத்துப் பயனாளிகளுக்கும் குறிப்பாக இடம்பெயரும் மக்களுக்கு உதவுவதை உறுதி செய்கின்றது.
இவர்கள் தங்களது சொந்தத் தேர்வின் அடிப்படையில் நாடெங்கிலும் உள்ள எந்தவொரு PDS (PDS-Public Distribution system) கடையையும் அணுக முடியும்.
ஏற்கெனவே 12ற்கும் மேற்பட்ட மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன.
மத்தியப் பிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம், குஜராத், கோவா, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.