மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்ட அமைச்சர்களின் குழு வணிகரீதியிலான வாகனங்களின் நாடு முழுவதுமான எளிதான இயக்கத்திற்காக ஒரு தேசம் ஒரு வரி என்ற கொள்கையை முன்மொழிந்துள்ளது.
இரண்டு நாள் நடைபெற்ற இந்த அமைச்சர்கள் குழுவின் மாநாடு ராஜஸ்தான் போக்குவரத்து அமைச்சர் யூனுஸ்கான் அவர்களின் தலைமையில் அஸ்ஸாமின் கவுகாத்தியில் நடைபெற்றது.
இந்த முன்மொழிவு
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு சாலை வரிவிதிப்பு ஏதுமின்றி வாகனங்களின் இயக்கத்திற்கு அனுமதிக்கிறது.
குறைந்த வரியுடைய மாநிலங்களில் வாகனங்களைப் பதிவு செய்து மற்ற மாநிலங்களில் தங்களது வாகனங்களை இயக்கும் மக்களை கண்காணிக்கின்றது.
மோட்டார் வாகனங்களில், வரியை விதிப்பதற்கான கொள்கைகளை தீர்மானிப்பதற்கான அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. விலைப்பட்டியலிலுள்ள வாகன விலையின் மூன்று அடுக்குகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஒரே மாதிரியான வரி விதிக்கப்படும்.
10 லட்சத்திற்கும் கீழான விலையுடைய வாகனங்களின் மீதான வரி 8%, 10-20 லட்சம் மதிப்புடைய வாகனங்களின் மீதான வரி 10%, 20 லட்சத்திற்கும் மேலான மதிப்புடைய வாகனங்களின் மீதான வரி 12% ஆகும்.
மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு வரியில் 2% தள்ளுபடியும், டீசல் வாகனங்களுக்கு 2% கூடுதல் வரியும் விதிக்கப்படும்.