இந்தியாவில் வங்கி விகிதத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியான தங்க விலையை அறிமுகப் படுத்திய முதல் மாநிலம் கேரளாவாகும்.
இந்த ஒரே மாதிரியான விலை நிர்ணயமானது, 916 தரம் கொண்ட தூய்மையான 22 காரட் தங்கத்துக்குப் பொருந்தும்.
பொதுவாக, தங்கத்தின் விலையானது வங்கி விகிதத்தை விட கூடுதலாக ஒரு கிராமுக்கு ரூ.150-300 அளவில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
தங்கத்தின் மீதான வங்கி விகிதங்கள், சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் இறக்குமதி வரி உள்ளிட்ட பிற வரிகள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக விதிக்கப்பட்டுள்ளன.