மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ”ஒற்றைச் சாளர அடிப்படையில் அனுமதி வழங்கும் முறையை” தொடங்கி வைத்தார்.
இது நிலக்கரிச் சுரங்கங்களின் சுமூகமான செயல்பாடுகளுக்கு அனுமதியைப் பெறுவதற்கான ஒரு நிகழ்நேரத் தளமாகும்.
2020 ஆம் ஆண்டின் ஜுன் மாதத்தில், பிரதமர் அவர்கள் ஆத்மநிர்பர் பாரத் அபியானின் கீழ் கூறப்பட்டுள்ளவற்றின் ஒரு பகுதியாக வணிக ரீதியான சுரங்கங்களுக்காக 41 நிலக்கரிச் சுரங்கங்களின் ஏலத்தை தொங்கி வைத்தார்.
இந்தியாவானது உலகின் 4வது மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தியாளர் நாடாக இருந்த போதிலும் உலகில் 2வது மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளர் நாடாக விளங்குகின்றது.
1973 ஆம் ஆண்டில் நிலக்கரித் துறையானது தேசியமயமாக்கப் பட்டது.
இது உள்நாட்டு நிலக்கரியானது பொதுத் துறை நிறுவனங்களால் மட்டுமே தோண்டி எடுக்க முடியும் என்பதை குறிக்கின்றது.