TNPSC Thervupettagam

ஒற்றைப் பயன்பாட்டிற்கான பிளாஸ்டிக் (நெகிழி) மீதான தடை

January 2 , 2019 2025 days 871 0
  • 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் மீதான உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் மீதான தமிழ்நாடு அரசின் தடையாணையானது மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வந்தது.
  • கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்த பின், இங்கு யார் தடையை மீறுகிறார்களோ அந்த பயன்பாட்டாளர்கள் மீது அபராதம் விதிக்க அரசு முடிவு எடுக்கும்.
  • தடை செய்யப்பட்ட இந்த 14 வகையான பொருட்கள் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பிளாஸ்டிக்கில் 5 சதவிகிதம் மட்டுமே ஆகும்.
  • ஏற்கனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இரண்டு வருடங்களில் பல் அடுக்கு கொண்ட சுத்திகரிக்கப்பட முடியாத பிளாஸ்டிக்கின் பயன்பாடு மற்றும் உபயோகத்தினைத் தவிர்த்திட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (திருத்தம்) விதிகள் 2018 என்பதனை வெளியிட்டு இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்