செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிவரும் இரண்டு விண்கலங்கள் செந்நிறக் கோளின் மத்திய ரேகைக்கு அருகில் உள்ள உயரிய எரிமலைகளின் மேல் பகுதியில் உறைபனி இருப்பதைக் கண்டறிந்துள்ளன.
சூரியக் குடும்பத்தின் மிக உயரமான எரிமலைகளான தர்சிஸ் எரிமலைகளில் உறை பனி இருப்பதை அவை கண்டறிந்தன.
மனித முடி அளவிலான தடிமனேயேக் கொண்டுள்ள (ஒரு மில்லிமீட்டரில் நூற்றில் ஒரு பங்கு தடிமன்) இந்த உறைபனியானது மிகப்பெரியப் பரப்பளவில் பரவியுள்ளது.
இது செவ்வாய்க் கிரகத்தில் குளிர் காலங்களில் சுமார் 150,000 டன் நீர் உறைந்து ஆவியாவதற்குச் சமம் ஆகும்.
இது தோராயமாக 60 ஒலிம்பிக் நீச்சல் குளங்களுக்குச் சமம் ஆகும்.
செவ்வாய்க் கிரகத்தின் தர்சிஸ் பகுதியில் ஏராளமான எரிமலைகள் அமைந்துள்ளன.
இதில் ஒலிம்பஸ் மோன்ஸ் மற்றும் தர்சிஸ் மாண்டஸ், அஸ்க்ரேயஸ், பாவோனிஸ் மற்றும் ஆர்சியா மோன்ஸ் ஆகியவை அடங்கும்.
இந்தப் பகுதியில் உள்ள பல எரிமலைகள் பூமியில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தைப் போல் பெரியவை அல்லது அதைவிடப் பெரியவையாகும்.
ஒலிம்பஸ் மோன்ஸ் எவரெஸ்ட்டைப் போல மூன்று மடங்கு உயரம் கொண்டது.