TNPSC Thervupettagam

ஒலிம்பிக் போட்டிகள் 2024 : பசுமை நடவடிக்கை சார் விளையாட்டுப் போட்டிகள்

August 2 , 2024 112 days 211 0
  • 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், இதுவரை இல்லாத அளவிற்கு சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நிகழ்வின் போது பதிவாகும் கார்பன் உமிழ்வினை சுமார் 50 சதவீதம் குறைக்க உள்ளதாக ஒழுங்கமைப்புக் குழு உறுதியளித்துள்ளது.
  • இது டோக்கியோ 2020, ரியோ 2016 மற்றும் இலண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் பதிவான சுமார் 3.5 மில்லியன் டன்கள் என்ற கார்பன் உமிழ்வினை வரவிருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் 1.75 மில்லியன் டன்களாக குறைக்க உள்ளது.
  • இந்த ஆண்டு போட்டிகள் முழுமையாக புவி வெப்ப மற்றும் சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலங்களைச் சார்ந்து நடத்தப்பட உள்ளன.
  • அனைத்து ஒலிம்பிக் மைதானங்களுக்கும் பொதுப் போக்குவரத்து மூலம் சென்று அடையும் வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • இந்த நகரத்தில் 1,000 கி.மீ தொலைவு வரையிலான பிரத்தியேக மிதிவண்டி ஓட்டப் பாதைகளை உருவாக்கியுள்ளதோடு, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நாட்கள் வரை 3,000 வாடகை மிதிவண்டிகள் வழங்கப் பட உள்ளன.
  • இது தாவர மூலம் சார்ந்த, உள்நாட்டிலேயே கிடைக்கப் பெறும் மற்றும் நிலையான உணவு விருப்பத் தேர்வுகளை வழங்குகிறது.
  • பாரீஸ் நடத்தும் 95 சதவீத ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஏற்கனவே உள்ள கட்டமைப்புகள் அல்லது தற்காலிக அமைப்புகளையே பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்