ஒலிம்பிக் விளையாட்டுக்கான மையங்களை மேம்படுத்துவதற்காக சென்னை மற்றும் அந்நகரத்தைச் சுற்றிலும் 3 வெவ்வேறு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.
மெரீனா கடற்கரையில் உள்ள பாய்மரப் போட்டிக்கான மையம்
கேளம்பாக்கம் – வண்டலூர் சாலையின் மீது அமைந்த மேலக்கோட்டையூரில் உள்ள குவாரியில் படகு சவாரி மற்றும் சிறு படகு சவாரி விளையாட்டுக்கான மையம்
துரைப்பாக்கத்தில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் மீது 2.9 கிலோ மீட்டர் தூர படகுப் போட்டி
இதற்கான இடங்களை அடையாளம் காணுதல் மற்றும் அதற்கான வசதிகளைப் பராமரித்தல் ஆகியவற்றை தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணையம் (Sports Development Authority of Tamil Nadu - SDAT) மேற்கொள்ள இருக்கிறது.