TNPSC Thervupettagam

"ஒலி எழுப்பும்" பிளாஸ்மா அலைகள்

December 12 , 2023 350 days 213 0
  • புதன் கோளைச் சுற்றி மர்மமான "ஒலி எழுப்பும்" பிளாஸ்மா அலைகள் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்து பதிவு செய்துள்ளனர்.
  • இத்தகையக் குழும அலைகள் பூமி, வியாழன் மற்றும் சனி ஆகியவற்றில் பதிவு செய்யப் பட்டதோடு, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றிலும் பதிவு செய்யப் பட்டன.
  • புதன் கோளின் காந்தப்புலத்தில் இருந்து "விசில்" போன்ற ஒலி அலைகள் வெளிப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • மற்ற கிரகங்களில் உள்ள வலுவான காந்தப்புலத்தினைப் போல, புதன் கோளானது வலுவான காந்தப் புலத்தினை கொண்டிராததால் இந்த கண்டுபிடிப்பு மிகவும் சுவாரஸ்யமானதாக உள்ளது.
  • புதன் கோள் ஆனது அடிப்படையில், பெரும்பாலும் வளிமண்டலம் இன்றி காணப்படும் ஒரு பெரிய பாறைக் கோளம்  ஆகும்.
  • இது சூரியனுக்கு மிக அருகில் சுற்றி வருவதால், இந்தக் கோள் தொடர்ந்து சூரிய கதிர் வீச்சு மற்றும் காற்றினால் தாக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்