April 23 , 2023
584 days
264
- ஒல்கிலூட்டோ 3 அணு உலையானது சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் தனது உற்பத்திச் செயல்முறைகளைத் தொடங்கியது.
- 1600 மெகாவாட் திறன் கொண்ட இந்த உலையானது, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பின்லாந்தின் தேசிய மின்னாற்றல் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.
- ஒல்கிலூட்டோ 3 உலையின் கட்டுமானப் பணிகளானது, 2005 ஆம் ஆண்டில் தொடங்கி, நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
- 15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு ஐரோப்பாவின் புதிய தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த முதல் உலையாக ஒல்கிலூட்டோ 3 உள்ளது.
- இது முதல் புதிய தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த EPR அல்லது ஐரோப்பிய அழுத்த உலை ஆகும்.
- இது பிரான்சு நாட்டின் அரேவா மற்றும் ஜெர்மனி நாட்டின் சீமென்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது.
Post Views:
264