TNPSC Thervupettagam

ஒளரங்காபாத் மற்றும் ஓஸ்மானாபாத் பெயர் மாற்றம்

July 4 , 2022 749 days 546 0
  • ஓஸ்மானாபாத் தாராஷிவ் என்றும், ஒளரங்காபாத் சம்பாஜி நகர் என்றும் பெயர் மாற்றப் பட்டுள்ளன.
  • நவி மும்பை விமான நிலையத்தின் பெயரும் டிபி பாட்டீல் சர்வதேச விமான நிலையம் என மாற்றப்படும்.
  • ஒளரங்காபாத் பகுதியானது, 1610 ஆம் ஆண்டில் அகமத்நகரின் நிஜாம்ஷாஹி வம்சத்தின் சித்தி என்ற இனத்தின் தளபதி மாலிக் ம்பர் என்பவரால் நிறுவப்பட்டது.
  • ஔரங்காபாத் பகுதிக்கு அந்த நேரத்தில் கிர்கி அல்லது காட்கி என்று பெயரிடப்பட்டது.
  • 1626 ஆம் ஆண்டில் மாலிக் ம்பரின் மரணித்திற்குப் பிறகு அவரின் மகன் ஃபதே கான் இதற்கு ஃபதேபூர் என பெயரிட்டார்.
  • முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் 1653 ஆம் ஆண்டில் தக்காணத்தின் மீது படைடுத்து அந்த நகரத்தில் தனது தலைநகரை அமைத்தார்.
  • மேலும் அதன் பெயரை அவர் ஔரங்காபாத் என்று மாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்