இந்தத் துறையின் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பினைக் கொண்டு வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முக்கியச் சட்டம் ஆனது, நமது ஒளிபரப்புத் துறையின் ஒழுங்குமுறை கட்டமைப்பை நவீனமயமாக்குவதோடு, காலாவதியான சட்டங்கள், விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஓர் ஒருங்கிணைந்த, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் கூடியதாக மாற்றுகிறது.
இது இணையதள ஒளிபரப்புச் சேவை, எண்ணிம ஊடகம், நேரடித் தொலைகாட்சி ஒளிபரப்புச் சேவை, IPTV மற்றும் பலவற்றின் மாறும் நுட்பத்திற்கு ஏற்றவாறு, தொழில் நுட்ப முன்னேற்றம் மற்றும் சேவை பரிணாமத்தை ஊக்குவிக்கிறது.
இது தற்போதுள்ள 1995 ஆம் ஆண்டு கம்பிவடத் தொலைக்காட்சி வலையமைப்புகள் (ஒழுங்குமுறை) சட்டத்தினை மாற்றியமைக்க முயல்கிறது.