TNPSC Thervupettagam
December 4 , 2019 1820 days 845 0
  • இந்தியா தனது உள்நாட்டில் உருவாக்கிய அணுசக்தி திறன் கொண்ட பிரித்வி - 2 ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
  • இது இந்திய இராணுவத்தின் பயனர் சோதனையின் ஒரு பகுதியாக இரவில் சோதனை செய்யப் பட்டது.
  • இவை இரவுநேரத்தில் இரண்டாவது முறையாக நடத்தப்படும் பிரித்வி - 2 வகை ஏவுகணையின் சோதனைகளாகும்.
  • ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், வீலர் தீவு என்று முன்னர் அறியப்பட்ட அப்துல் கலாம் தீவில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் நடமாடும் ஏவு வாகனத்தில் இருந்து இந்த சோதனைகள் நடத்தப் பட்டன.

பிரித்வி 2 ஏவுகணை பற்றி

  • இது 350 கி.மீ வரம்பு கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் தந்திரோபாய ஏவுகணை ஆகும்.
  • இது ஒரு ஒற்றை நிலை திரவ எரிபொருள் கொண்ட ஏவுகணையாகும்.
  • ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டில் உருவாக்கிய இந்தியாவின் முதல் ஏவுகணை இதுவாகும்.
  • இது 500 முதல் 1,000 கிலோ அளவுடைய வெடிகுண்டுகளை சுமக்கும் திறன் கொண்ட வழக்கமான மற்றும் அணுசக்தி ஏவுகணை ஆகும்.
  • இது இந்தியாவின் மூலோபாயப் படைகளால் பயன்படுத்தப் படுகின்றது.
  • இது இந்தியப் பாதுகாப்புப் படையில் 2003 ஆம் ஆண்டில் சேர்க்கப் பட்டது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்