TNPSC Thervupettagam
April 24 , 2021 1186 days 700 0
  • செயற்கைக் கோள்களிலிருந்து வரும் ஒளி மாசுபாடானது வானியல் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
  • பூமியைச் சுற்றி வரும் செயற்கைக் கோள்கள் மற்றும் விண்வெளிச் சிதைவுகளானது இரவு நேர வானத்தின் பிரகாசத்தை அதிகரிக்கும்.
  • இரவு நேர வானத்தின் ஒட்டு மொத்தப் பிரகாசமானது புவிக் கிரகத்தின் இயற்கை ஒளி மட்டங்களை விட 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கப் படும்.
  • இத்தகைய ஒளி மாசுபாடு நமது பிரபஞ்சத்தை அவதானிக்கும் வானியலாளர்களின் திறனைத் தடுக்கக் கூடும்.
  • பூமியைச் சுற்றி 9,200 டன்களுக்கும் அதிகமான விண்வெளிப் பொருட்கள் உள்ளன.
  • விண்வெளிச் சிதைவுகள் ஒன்றோடு ஒன்று மோதும் அபாயத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மற்ற விண்வெளிப் பொருட்களுடன் சேர்ந்து ஒளி மாசுபாட்டிற்குப் பங்களிக்கிறது.
  • விண்வெளிப் பொருட்களிலிருந்துப் பிரதிபலிக்கப்பட்டுச் சிதறடிக்கப்பட்ட சூரிய ஒளியானது பூமியில் இருக்கும் தொலைநோக்கிகளால் மேற்கொள்ளப்படும் அவதானிப்புகளில் கோடுகளாகத் தோன்றும்.
  • இது இரவு நேர வானில் விண்வெளி பொருட்களின் ஒட்டுமொத்தத் தாக்கத்தை மதிப்பீடு செய்யும் முதல் ஆராய்ச்சியாகும்.
  • முன்னதாக இரவு நேர வானில் வானியலாளர்களின் படங்களைப் பாதிக்கும் தனிப்பட்ட செயற்கைக் கோள்கள் மற்றும் விண்வெளிச் சிதைவுகளின் தாக்கம் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
  • இதன் ஆராய்ச்சியாளர்கள் ஸ்லோவாக்கியாவில் உள்ள கொமினியஸ் என்ற பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்