- மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மூன்றடுக்கு விதிகளைக் கொண்ட இந்தியாவின் முதல் தேசிய பயணத்தடைகள் பட்டியலை வெளியிட்டது. இது கண்காணிப்புப் பட்டியல் அல்லது தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நபர்களை விமானப் பயணங்களை மேற்கொள்வதை தடுப்பதற்காகவும், அவர்களின் நடத்தை விதிமீறல்களை தடுப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகும்,
- இம்மாதிரியான நன்னடத்தையற்ற பயணிகளுக்கு பயணத் தடைகளின் கண்ணோட்டத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன.
நிலை 1 - ஒழுக்கமற்ற உடல் அசைவுகள், குடிபோதையில் உளறுதல், வாய்மொழியில் தொல்லை கொடுத்தல் - தடை மூன்று மாதம் வரையில்.
நிலை 2 - உடல்ரீதியாக தவறான நடத்தை (தள்ளுதல், உதைத்தல், அடித்தல், பொருத்தமற்ற தொடுதல்) - தடை ஆறுமாதம் வரையில்.
நிலை 3 - உயிரை மிரட்டும் நடத்தை (தாக்குதல், விமானத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்) - தடை குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் வரையில்.