TNPSC Thervupettagam

ஒழுங்கற்ற பருவநிலை: FAO அறிக்கை

April 5 , 2024 233 days 244 0
  • ஆண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் ஆனது வெப்பநிலை ஈடுசெய்தல் இழப்பு நிலையால் 8 சதவீதம் அதிகமாகவும், வெள்ளத்தால் 3 சதவீதம் அதிகமாகவும் இழப்புகளைச் சந்திக்கின்றன.
  • முதியோர்களைக் காட்டிலும், இளைஞர்கள் (35 வயதுக்கு உட்பட்டவர்கள்) தலைமை தாங்கும் குடும்பங்கள், தீவிர வானிலை நிகழ்வுகளால் வேளாண் சார் வருமானத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம் கொண்டுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
  • வெப்பம் மற்றும் வெள்ளம் போன்ற பருவநிலை சார்ந்த நெருக்கடிகளால் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பு, வெப்பநிலை ஈடு செய்தல் இழப்பு நிலையால் 83 டாலர் மற்றும் வெள்ளத்தினால் 35 டாலர் என்ற தனிநபர் வருமான இழப்பு நிலையில், முறையே மொத்தமாக 37 பில்லியன் டாலர் மற்றும் 16 பில்லியன் டாலர் இழப்பு கொண்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
  • சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் கூட, ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மொத்த வருமானத்தில் 34 சதவீதம் அதிக இழப்பினைச் சந்திக்க நேரிடும்.
  • 2017-18 ஆம் ஆண்டில் கண்காணிக்கப்பட்ட பருவநிலை நிதியில் 7.5% மட்டுமே பருவ நிலை மாற்ற ஏற்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற நிலையில் இதில் வேளாண்மை, வனவியல் மற்றும் இதர பிற நிலப் பயன்பாடுகளுக்கு சுமார் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில், 68 குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் அறிமுகப் படுத்தப்பட்ட சுமார் 80% வேளாண் கொள்கைகள் பெண்கள் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்து கருத்தில் கொள்ளவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்