வனவிலங்கு வளங்காவலர்கள் கொண்ட ஒரு குழுவானது, முதன்முறையாக பார்வைத் திறனற்ற கங்கை நதி ஓங்கில்களுக்கு அடையாளக் குறியீடு பொருத்தியுள்ளது.
இது அசாம் மாநில வனத்துறை மற்றும் ஆரண்யக் எனப்படும் பல்லுயிர்ப்பெருக்க வளங்காப்புக் குழுவுடன் இணைந்து இந்திய வனவிலங்கு நிறுவனத்தினால் (WII) மேற் கொள்ளப்பட்டது.
இது ஓங்கில்களின் பருவகால மற்றும் இடம்பெயர்வு முறைகள், வரம்பு, பரவல் மற்றும் வாழ்விடப் பயன்பாடு ஆகியவற்றை மிகவும் நன்குப் புரிந்து கொள்வதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 90% ஓங்கில் இனங்கள் உள்ளன என்பதோடு இவை வரலாற்று ரீதியாக கங்கை – பிரம்மபுத்திரா - மேக்னா மற்றும் கர்ணபுலி நதிப் படுகைகளில் காணப் படுகின்றன.