TNPSC Thervupettagam

ஓத மண்டலங்களின் உயிரியல் கணக்கெடுப்பு

February 19 , 2025 4 days 57 0
  • இந்தியாவின் முதல் ஓத மண்டலங்களின் உயிரியல் கணக்கெடுப்பு (இன்டர்டைடல் பயோபிளிட்ஸ்) ஆனது, விசாகப்பட்டினம், மும்பை, கோவா மற்றும் அந்தமான் ஆகிய கடலோரப் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட உயிரினங்கள் காணப்படுவதாக கண்டறிந்துள்ளது.
  • உயிரியல் கணக்கெடுப்பின் போது மும்பைப் புறநகரில் 80 இனங்களும், பெருநகரப் பகுதியில் 120 இனங்களும் பதிவு செய்யப்பட்டது.
  • அந்தமான் தீவுகளின் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த மூன்று ஓத மண்டலக் கணக்கெடுப்புகளில் 70க்கும் மேற்பட்ட உயிரினங்கள் கண்டறியப்பட்டன.
  • ஒரு ஓத மண்டலம் ஆனது பெருங்கடல் பரப்பானது நிலத்துடன் இணையும் ஒரு மாறு நிலைப் பகுதியைக் குறிக்கிறது.
  • இது உயர் ஓதத்தின் போது நீரில் மூழ்குகின்ற, மற்றும் ஓத அலைகள் பின்வாங்கும் போது வெளிப்பரப்பில் காற்றில் வெளிப்படுவதற்கும் இடையில் உள்ள மாறுநிலை கொண்ட ஒரு தனித்துவமான பகுதியாகும்.
  • கடலோர அரிப்புக்கு எதிராக ஒரு இயற்கையான இடையகமாகச் செயல்படுகின்றன என்ற ஒரு நிலையில் அவை அலை ஆற்றலை நன்கு உட்கிரகித்து கரையோரங்களை நிலைப்படுத்த உதவுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்