இது வங்காள விரிகுடாவில் காணப்படக் கூடிய ஒரு புதிய விலாங்கு வகை பாம்பு இனமாகும்.
இந்திய விலங்குகளை வகைப்படுத்துதலில், இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரான டாக்டர் கைலாஷ் சந்திரா ஆற்றிய மகத்தானப் பங்களிப்புகளை கௌரவிப்பதற்காக இது ஓபிக்தஸ் கைலாஷ் சந்திராய் என்று பெயரிடப் பட்டுள்ளது.
இது இந்தியக் கடற்கரையில் காணப்படக் கூடிய ஓபிக்தஸ் இனத்தின் எட்டாவது இனமாகும்.