TNPSC Thervupettagam

ஓபியோபேகஸ் காளிங்கா

November 30 , 2024 23 days 79 0
  • மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் இராஜ நாகப் பாம்பிற்கு ஓபியோபகஸ் காளிங்கா என கர்நாடகா மாநிலம் அதிகாரப் பூர்வமாகப் பெயரிட்டுள்ளது.
  • இது முதன்முதலில் 1836 ஆம் ஆண்டில் டென்மார்க் நாட்டின் ஒரு இயற்கையியலாளர் தியோடர் எட்வர்ட் கேண்டர் என்பவரால் ஓபியோபகஸ் ஹன்னா என வகைப்படுத்தப் பட்டது.
  • பகலில் நடமாடும் இந்தப் பாம்புகள் ஆனது, பெரும்பாலும் சாரைப் பாம்புகள், தமன் பாம்புகள் மற்றும் பிற நாகப் பாம்புகள் போன்ற பாம்புகளை உண்கின்றன.
  • இராஜ நாகப் பாம்பு ஆனது, புவியியல் வம்சாவளியின் அடிப்படையில் நான்கு வெவ்வேறு இனங்களாக மறுவகைப் படுத்தப்பட்டுள்ளது.
    • வடக்கு இராஜ நாகம் (ஓபியோபகஸ் ஹன்னா): பாகிஸ்தான் முதல் கிழக்கு சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை காணப்படுகிறது.
    • சுண்டா இராஜ நாகம் (ஓபியோபகஸ் பங்காரஸ்): தாய்லாந்து, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸின் சில பகுதிகள் உட்பட தென்கிழக்கு ஆசியாவில் வாழ்கிறது.
    • மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இராஜ நாகப்பாம்பு (ஓபியோபேகஸ் காளிங்கா): இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.
    • லூசோன் இராஜ நாகம் (ஓபியோபகஸ் சல்வடனா): பிலிப்பைன்ஸின் லூசன் தீவில் மட்டுமே காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்