TNPSC Thervupettagam

ஓராங்குட்டானின் புது வகை இனம் கண்டுபிடிப்பு

November 7 , 2017 2604 days 900 0
  • போங்கோ டபானுலியேன்சிஸ் எனப் பெயருள்ள ஒராங்குட்டானின் புதிய வகை மனிதக்குரங்கு இனம்  வட சுமத்ரா தீவின் டபானுலி மாவட்டத்தில் உள்ள பாடாங்டோரு வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
  • கடைசி 90 வருடங்களில் விஞ்ஞானிகளால் விளக்கமளிக்கப்பட்ட முதல் பெரும் மனிதக்குரங்கு  இன வகை இதுவே ஆகும்.
  • இவை உலகின் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளான (Most Endangered) பெரும் மனிதக்குரங்கினமாகும்.
  • உலகில்  தற்போது இவ்வகை ஒராங்குட்டான்களின் எண்ணிக்கை வெறும் 800 மட்டுமே ஆகும்.
  • இவற்றின் மண்டைஓட்டு அமைவு, பற்கள் மற்றும் ஜீன்கள் ஓராங்குட்டானின் பிற இருவகை இனங்களை விட வித்தியாசமானவை.
  • டபானுலி ஓராங்குட்டான்கள் முதன் முதலில் 1930-ல் தனித்த இனத்தொகையுடைய மனிதக்குரங்கினமாக கண்டறியப்பட்டன.
  • அதுவரை விஞ்ஞானிகளால், ஓராங்குட்டனின் இந்த ஒரு வகைக் குரங்கானது போர்னியன், சுமத்ரன் எனும் பிற இருவகை ஓராங்குட்டானின் இன வகையிலிருந்து வேறுபட்டவை என உறுதிப்படுத்த இயலவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்