தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) ஆனது ஓராண்டு கால நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்கத்தினைத் தொடங்க உள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதியன்று தொடங்கப்பட உள்ள இந்த முன்னெடுப்பானது, ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் சென்னை மாநகராட்சியிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முன்னெடுப்பானது, 10 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் TNPCB வாரியத்தினால் மேற்கொள்ளப்பட உள்ளது.